/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோவிந்தன் நாமம் தான் காப்பாற்றும்
/
கோவிந்தன் நாமம் தான் காப்பாற்றும்
ADDED : பிப் 29, 2024 11:23 PM

ராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம் ஆயிரவைசிய மகாஜன சபை சார்பில் முத்தால பரேஸ்வரிஅம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நடந்தது.
திரவுபதி மானம் காத்தல் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
பஞ்சபாண்டவர்கள் 5 பேரை திரவுபதி மணந்தார்.அவர்கள் சூதாடி அனைத்தையும் தோற்றனர். கோடீஸ்வரன் மகளான திரவுபதியையும் தோற்றனர்.
சபையில் அவளது புடவையை பற்றி இழுக்கும் போது கோவிந்தா, கோவிந்தா என கதறினாள். அப்போது பகவான் சபைக்கு வரவில்லை. அவரது நாமம் அவருக்கு புடவையை கொடுத்து காப்பாற்றியது.
ஆகவே நமக்கும் வயது ஆகும் போது உடல் நம்மை கைவிட்டு விடும். அப்போது கோவிந்தன் நாமத்தை சொன்னால் தான் நிம்மதி. அது தான் நம்மை காப்பாற்றும்.
அதனால் தான் சவுக்கியம் பெறுவோம். அதனால் உயிர் இருக்கும்வரை கோவிந்தன் நாமத்தை சொல்லுங்கள்.ஆபத்தை போக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
இன்று (மார்ச் 1ல்) இரவு 7:00மணிக்கு 'நளசரித்திரம்' என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நடக்கிறது.

