/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறந்தவெளி பலகார விற்பனை கேள்விக்குறியானது சுகாதாரம்
/
திறந்தவெளி பலகார விற்பனை கேள்விக்குறியானது சுகாதாரம்
திறந்தவெளி பலகார விற்பனை கேள்விக்குறியானது சுகாதாரம்
திறந்தவெளி பலகார விற்பனை கேள்விக்குறியானது சுகாதாரம்
ADDED : பிப் 14, 2025 07:03 AM
திருவாடானை,: திருவாடானை, தொண்டியில் தின்பண்டங்கள் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் விற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம், மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வடை, போண்டா உள்ளிட்ட பல்வேறு வகையான தின்பண்டங்கள் சில கடைகளில் தட்டுகளில் வைத்து திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
வாகனங்கள் துாசியை கிளப்பியபடி செல்கின்றன. துாசிகள் அனைத்தும் தின்பண்டங்களின் மீது ஒட்டிக் கொள்கிறது. அதை வாங்கி சாப்பிடுபவர்கள் உடலுக்கு சுகாதாரக் கேடும், வயிற்று கோளாறும் ஏற்படுகிறது.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைக்காரர்களிடம் சென்று திறந்த தின்பண்டங்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.