/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் ரேஷன் கடை கலையரங்கம் திறப்பு விழா
/
ராமேஸ்வரத்தில் ரேஷன் கடை கலையரங்கம் திறப்பு விழா
ADDED : நவ 15, 2024 06:36 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி 16-வது வார்டில் அட்டமால் தெரு, இந்திரா நகர், மாந்தோப்பு, அம்பேத்கர் காலனி ஆகிய தெருக்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் வெகு துாரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி சிரமப்பட்டனர்.
இதனை தவிர்க்க எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் அட்டமால் தெருவில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும் 17-வது வார்டில் உள்ள கடற்கரை மாரியம்மன் கோயில் அருகில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்.எல்.ஏ., காதர்பாட்சா திறந்து வைத்தார்.
நகராட்சி தலைவர் நாசர்கான், முன்னாள் தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அன்னக்கொடி ராணி, திசைவீரபாண்டியன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.