/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனநல அவசர சிகிச்சை மீள் மையம் திறப்பு விழா
/
மனநல அவசர சிகிச்சை மீள் மையம் திறப்பு விழா
ADDED : செப் 04, 2025 11:34 PM
கீழக்கரை:ஏர்வாடியில் செயல்பட்டு வரும் அரசு மனநலம் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட புதிய மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக அரசு செயலர் சமூக சீர்திருத்த துறை ஆணையர் டாக்டர் வள்ளலார், சுகாதார சேவை இணை இயக்குனர் டாக்டர் பிரகலாதன், மூத்த ஆலோசகர் செல்லமுத்து, அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன், டாக்டர் கார்த்திக் தேவநாயகம், டாக்டர் அமுதா ராணி, ஏர்வாடி அரசு மருத்துவமனை டாக்டர் ஜவாஹிர் உசேன், கல்லுாரி முதல்வர் சுமையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொது இடங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கான மருத்துவ வசதி ஏற்பாடு செய்வதே இதன் நோக்கம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.