/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
/
சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ADDED : ஜன 30, 2024 12:03 AM
பரமக்குடி -பரமக்குடி அருகே சத்திரக்குடி வட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
சத்திரக்குடி பகுதியில் விவசாயிகள் பயனடையும் வகையில் போகலுார், அரியகுடி, காமன்கோட்டை, பாண்டிக்கண்மாய், முதலூர் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சன்னரகம் 'ஏ' கிரேடு ரூ.2310, சன்னரகம் 'சி' கிரேடு ரூ. 2265 குவிண்டால் விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், வங்கி கணக்கு எண் நகல்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.