ADDED : அக் 29, 2024 04:52 AM
கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் புதிதாக கட்டப்பட்ட முத்துராமலிங்கத்தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங்கில் திறந்து வைத்தார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 117 வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழா அக்.30ல் நடக்கிறது. இங்கு அரசு சார்பில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நினைவிடம் முன்பு நிரந்தரமாக ரூ.1 கோடியே 55 லட்சத்தில் கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தப் பணிகள் நிறைவு பெற்று தற்போது குருபூஜை நடப்பதையொட்டி சென்னையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., முருகேசன், சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
