/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சந்தையில் குடிநீர் தொட்டி திறப்பு
/
பரமக்குடி சந்தையில் குடிநீர் தொட்டி திறப்பு
ADDED : செப் 21, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி 33வது வார்டு சந்தை பகுதியில் ரூ.6 லட்சத்தில் புதிய ஆழ்குழாயுடன் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.
நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தி.மு.க., வார்டு செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார். இதனால் வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவர். நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.