/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு
/
பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு
ADDED : ஜூலை 30, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் பவுண்டேஷன் நிதி உதவியில் தானம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் நேற்று திறக்கப்பட்டது.
ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் பவுண்டேஷன் இயக்குனர் சுப்ரா பதுாரி காணொலியில் கட்டடத்தை திறந்து வைத்தார். முதன்மை கல்வி அலு வலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி, அறக்கட்டளை நிர் வாகிகள் செல்வ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

