ADDED : ஏப் 07, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காந்தி சிலை அருகே பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
அப்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, தண்ணீர் வழங்கப்பட்டது. தினந்தோறும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தண்ணீர் வழங்கப்படும் என்று கூறினர். உடன் துணைத் தலைவர் சுப்பிரமணியதேவர், ஒன்றிய இளைஞரணி ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

