/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அனுமதியின்றி 2,800 நாட்டு படகுகள் இயக்கம் * நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : செப் 21, 2024 10:21 PM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தில், 6,200 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3,400 படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,800 படகுகள் பதிவு செய்யப்படவில்லை.
பதிவு செய்யப்படாத படகுகள், அரசின் சலுகைகளை பெற முடியாது. விபத்திற்குள்ளாகும் போதோ, இலங்கையில் பிடிபடும் போதோ, அந்த படகுகளுக்கு எந்த இழப்பீடும் பெற முடியாது.
மேலும், இத்தகைய படகுகளால் நாட்டின் கடல் வழிப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இப்படகுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
எனவே, பதிவு செய்யப்படாத படகுகள் பறிமுதல் செய்யப்படும் என, மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு செய்யும் முறை
நாட்டுப்படகுகளை பதிவு செய்ய, படகு வடிவமைத்ததற்கான சான்று, மோட்டார் இயந்திரத்தின் பில் உட்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது புதிய திட்டத்தின் படி, படகு வைத்திருப்போர், தான் குடியிருக்கும் பகுதி ஊராட்சி நிர்வாகத்திடம் சான்று பெற்றால் போதுமானது.
ஆதார் கார்டு கொடுத்தால் உடனடியாக பதிவு செய்யப்படும். படகுக்கு பதிவெண் வழங்க, 2,000 ரூபாய் மீன் பிடி அனுமதிக்கு, 1,500 ரூபாய் இதர ஆவணங்கள் தயாரிப்பதற்கு, 500 ரூபாய் என, 4,000 ரூபாய் கட்டினால், மீன் பிடி படகுகள் உடனடியாக பதிவு செய்யப்படும்.