/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக கடலோரங்களில் ‛'சஜாக் ஆப்பரேஷன்'
/
தமிழக கடலோரங்களில் ‛'சஜாக் ஆப்பரேஷன்'
ADDED : அக் 29, 2024 11:34 PM

ராமநாதபுரம்,:தமிழக கடலோர மாவட்டங்களில் 'சஜாக் ஆப்பரேஷன்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகையை இந்திய கப்பற்படையினர், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து நடத்தினர். புதுச்சேரியிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் போலீசாரே பயங்கரவாதிகள் போல் வேடமணிந்து கடலோரப் பகுதிகளில் ஊடுருவது, அவர்களை தடுப்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
கடலில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வந்தால் 1093 என்ற எண்ணில் மீனவர்கள் தெரிவிக்க வேண்டும். மீன் பிடி தொழிலுக்கு செல்லும் அனைத்து மீனவர்களும் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை இந்த ஒத்திகை நடந்தது.