/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நிறுத்த வலியுறுத்தல்
/
உப்பளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நிறுத்த வலியுறுத்தல்
உப்பளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நிறுத்த வலியுறுத்தல்
உப்பளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நிறுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2025 03:31 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சி தெற்கு தெருவில் 15 ஏக்கரில் உப்பளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி, ஊர் மக்கள் வலியுறுத்தினர்.
பனைக்குளத்தை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் முகமது பரக்கத்துல்லா, பனைக்குளம் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.
இதில், பனைக்குளம் ஊராட்சி தெற்கு தெரு பகுதியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பட்டா நிலத்திலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் நிலத்தடி நீரை எடுத்து 15 ஏக்கரில் உப்பளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகே 300 மீட்டரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஊர் விரிவாக்க பகுதியாக உள்ளது. எனவே உப்பளம் அமைப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.