/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விதி மீறல் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
/
விதி மீறல் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
ADDED : பிப் 12, 2024 11:10 PM
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜன., 21ல் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இரு பயணிகள் பலியாகினர்.
டிரைவர் வீரமணிகண்டன் 34 சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமின் கேட்டு 3 வது முறையாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி குமரகுரு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
நீதிபதி உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறல் வாகனங்களால் விபத்துக்கள், உயிர்பலி ஏற்படுகிறது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விதி மீறல் வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும். கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.