ADDED : ஜூலை 29, 2025 11:11 PM
ராமநாதபுரம்; பருவமழை துவங்கும் முன்பு பாசன கண்மாய்களை சீரமைக்க வேண்டும் என மாவட்டகணிப்பாய்வு அலுவலர் வள்ளலார் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரான வெளிநாடு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு நலத்துறை ஆணையர் வள்ளலார் தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மழைக் காலம் வரவுள்ளதால் அனைத்து சாலைகள், பாலங்களை சீரமைக்கு மாறும், வரத்துக்கால்வாய்களை சீரமைத்து வைகையாற்றில் வரும் தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு முழுமையாக செல்வதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும் வள்ளலார் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வருவாய், தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து புதிய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், வணிக நிறுவனங்கள் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தெரிவித்தார்.
மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

