ADDED : மார் 18, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது: திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
உத்தரவை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செக்யூரிட்டிகள் தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார்.
