ADDED : ஆக 30, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை அருகே ஓரியூர் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொடியேற்றம் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு நடந்தது.
தினமும் காலை 6:00 மணிக்கு திருப்பலியும், திருவிழா நாட்களில் ஒப்புரவு அருட்சாதனம், நோயாளிகளுக்கான மந்திரிப்பும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக செப்.,9 இரவு தேர்பவனி நடைபெறும். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

