/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி உழவர் சந்தையில் வெளி வியாபாரிகள் ஆதிக்கம்; விவசாயிகள் வேதனை
/
பரமக்குடி உழவர் சந்தையில் வெளி வியாபாரிகள் ஆதிக்கம்; விவசாயிகள் வேதனை
பரமக்குடி உழவர் சந்தையில் வெளி வியாபாரிகள் ஆதிக்கம்; விவசாயிகள் வேதனை
பரமக்குடி உழவர் சந்தையில் வெளி வியாபாரிகள் ஆதிக்கம்; விவசாயிகள் வேதனை
ADDED : மே 05, 2025 07:26 AM

பரமக்குடி: பரமக்குடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகளை முறைப்படுத்தி கொடுக்காமல் வெளி வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை துவக்கப்பட்டது.
இதன்படி பரமக்குடி உழவர் சந்தை மருத்துவமனை ரோடு பகுதியில் துவக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் கீரை உள்ளிட்ட காய்கறிகளை காலை 7:00 மணிக்கு மேல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்து சேர்கின்றனர்.
தொடர்ந்து இவர்களுக்கு உழவர் சந்தையில் கடைகளுக்கான அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடி உழவர் சந்தையில் பெரும்பாலும் வெளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் விவசாயிகள் காலை 7:00 மணிக்கு வரும் முன்பே வெளி வியாபாரிகள் வந்து அமர்வதால் தினம் தினம் வெவ்வேறு கடைகளில் அமர வேண்டி உள்ளது. தொடர்ந்து மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் ஆர்ச் உள்ளிட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
எனவே அதிகாரிகள் உழவர் சந்தையை முறைப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

