தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி எதிர்ப்பால் நிறுத்தம்

 மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி எதிர்ப்பால் நிறுத்தம்

 மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி எதிர்ப்பால் நிறுத்தம்


ADDED : பிப் 01, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கல்: சிக்கல் அருகே சொக்கனை ஊராட்சி வல்லக் குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மைதானத்தின் நடுவில் பெரிய பள்ளம் தோண்டி 60 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் எதிர்ப்பால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி அரு கிலேயே கட்டக்கூடிய பெரிய மேல்நிலைத் தொட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. இங்கு தொட்டி கட்டப்படும் போது அவற்றின் மீது ஏறி மாணவர்கள் விளையாடும் நிலை உள்ளது.

மேலும் உயரமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எவ்வித பாதுகாப்புகளையும் கடை பிடிக்காமல் இஷ்டத்திற்கு பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர்.

இதனால் பள்ளி மாணவர்கள் விளையாட கூட வசதியின்றி ஆசிரியர் களின் வழிகாட்டுதலுடன் அப்பகுதியை கடந்து செல்ல இயலாமல் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் அமைக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கிராம மக் களின் முழு சம்மதத்துடன் ஊருணி கரையோரம் ஏற்கனவே உள்ள தொட்டிக்கு அருகில் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதியதாக கரூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ள இந்த டேங்கை பொதுமக்களின் ஆதரவுடன் வேறு இடத்தில் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவையாக உள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us