/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் சாலையோரத்தில் உலர வைக்கப்படும் நெற்பயிர்கள்
/
முதுகுளத்துாரில் சாலையோரத்தில் உலர வைக்கப்படும் நெற்பயிர்கள்
முதுகுளத்துாரில் சாலையோரத்தில் உலர வைக்கப்படும் நெற்பயிர்கள்
முதுகுளத்துாரில் சாலையோரத்தில் உலர வைக்கப்படும் நெற்பயிர்கள்
ADDED : ஜன 17, 2024 11:59 PM

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழைநீரில் மூழ்கி வீணாகிய நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து சாலையோரத்தில் உலர வைக்கின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்தில் மானாவாரி பயிராக நெல் சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு 20 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டனர். போதுமான அளவு மழை பெய்த போது நெற்பயிர்கள் வளர்ந்தன.
பின்னர் அறுவடைக்கு தயாராக விவசாயிகள் காத்திருந்தனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் 15 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வினாயுள்ளது.
மழைநீரில் வீணாகிய நெற்பயிர்களை கூலிக்கு ஆட்கள் வைத்து அறுவடை செய்து சாலையோரத்தில் உலர வைத்து நெல் தரம் பிரிக்கின்றனர்.
விவசாயி முருகன் கூறியதாவது, கடந்தாண்டு நெல் விவசாயத்தில் 50 மூடைக்கு மேல் விவசாயம் அறுவடை செய்யப்பட்டது. இந்தாண்டு அதில் 10 சதவீதம் நெல்லு கூட கிடைக்கவில்லை. சாலையில் உலர்த்தப்பட்டு நெல் பிரித்தெடுக்கும் போது நெல் வீணாகிறது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றார்.