/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
/
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
ADDED : அக் 16, 2025 05:15 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி அருந்ததியர் குடியிருப்பு அருகே நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் வட் டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல் உட்பட பல்வேறு கிரா மங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைகள் விதைத்து உள்ளனர். தற்போது பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளது.
முதுகுளத்துார் பகுதியில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் தேரிருவேலி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் 20 ஏக்கரில் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
வயல்களில் தேங்கிய தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. தற்போது முளைக்க தொடங்கிய பயிர்கள் அழுகி வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை துவங்குவதற்கு முன்பு வரத்துக்கால்வாய் துார்வாரப்பட்டுள்ளதால் அதிகளவு மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காமல் வெளியேறியது.
தற்போது துார்வாரப் படாததால் தேங்கும் மழைநீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலத்தில் தேங்கி யுள்ளது. எனவே இந்த ஆண்டு விவசாயத்தின் துவக்கத்திலேயே தண்ணீரில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதி காரிகள் ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.