/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானாங்குடி கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

ADDED : அக் 23, 2025 11:24 PM

ராமநாதபுரம்: தொடர் மழையால் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி கிராமத்தில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விதை நெல் கூட கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்கிறது. அக்.,21, 22ல் கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் நெல் வயல்களில் குளம் போல் மழை நீர் தேங்கியது. மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மானாங்குடி, கடுக்காய் வலசை, மேல மண்குண்டு, கீழ மண்குண்டு ஆகிய இடங்களில் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து குளம் போல தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகி வருகின்றன.
மத்திய, மாநில அரசு பயிர் காப்பீடு தொகை மற்றும் மழை நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயியும் முன்னாள் ஊராட்சி தலைவருமான பரமேஸ்வரி கூறுகையில், மானாங்குடி ஊராட்சியில் 2000 ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறிப் பெய்ததால் வயலில் மழை நீர் புகுந்துள்ளதால் விதை நெல் கூட எடுக்க வழியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்.