/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் பகுதியில்நெல் அறுவடை பணி துவக்கம்
/
ஆனந்துார் பகுதியில்நெல் அறுவடை பணி துவக்கம்
ADDED : ஜன 02, 2024 05:16 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் சுற்றுப்புற பகுதிகளில் நெற்பயிர்மகசூல் நிலையை அடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் அறுவடையை துவக்கி உள்ளனர்.
ஆய்ங்குடி, கருங்குடி, கப்பகுடி, திருத்தேர்வளை, வண்டல், அளவிடங்கான், விசவனுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
மகசூல் நிலையை எட்டிய வயல்களில் தற்போது ஈரப்பதம் நிலவுவதால் பெரும்பாலான வயல்களுக்கு அறுவடை இயந்திரங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் ஈரப்பதம் உள்ள வயல்களை செயின் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மகசூல் நிலையை எட்டிய சில கிராமங்களை தவிர்த்து இன்னும் ஓரிரு வாரத்தில் ஆனந்துாரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் அறுவடை பணி தீவிரமடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

