ADDED : ஜன 25, 2026 06:07 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இத்தாலுகாவில் இந்த ஆண்டு பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தீவிர நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடைப் பணிகள் ஆங்காங்கே சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறிய தாவது:
தற்போது முதல் கட்ட மாக நெய்வயல், சிறு மலைக்கோட்டை, நீர்க்குன்றம், வெள்ளைய புரம் மற்றும் மங்களக்குடி ஆகிய 5 ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயி களிடமிருந்து நெல் மூடைகள் வரத்து துவங்கியுள்ளன.
அரசூர், கற்காத்த குடி, திருவெற்றியூர் மற்றும் தொண்டி ஆகிய ஊர்களில் பிப்., முதல் வாரத்தில் கொள்முதல் நிலையங்கள் முழுமை யாகச் செயல்படத் துவங்கும்.
கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லைக் கொண்டு வரும் விவ சாயிகள், ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல் உள்ளிட்ட அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும். சன்ன ரகம் கிலோ ரூ.25.45, பொது ரகம் கிலோ ரூ. 25.00 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படும் என்றனர்.
