/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் பகுதியில் நெல் விதைப்பு பணி துவக்கம்
/
ஆனந்துார் பகுதியில் நெல் விதைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 30, 2025 11:13 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் நெல் விதைப்பு பணியை துவங்கி உள்ளதால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் ஆண்டு தோறும் 22 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார், சோழந்துார் பிர்க்காக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் நெல் விவசாயம் நடக்கிறது.
இந்த நிலையில் ஆடி மாதத்தில் நெல் விதைப்பு செய்வதற்கு ஏற்ற ஈரப்பதம் இல்லாததால் நெல் விதைப்பு பணி தாமதமாகி வந்தது.
கடந்த சில வாரங் களுக்கு முன்பு ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் விளை நிலங்களில் நெல் விதைப்புக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ஆனந்துார், ராதானுார், திருத்தேர்வளை, சாத்தனுார், கோவிந்தமங்கலம், துவார், வண்டல், அளவிடங்கான் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக நெல் விதைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக 90 முதல் 130 நாட்களுக்குள் மகசூல் அடையும். ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., டீலக்ஸ் பொன்னி, சோனா உள்ளிட்ட நெல் வகைகளை விவசாயிகள் விதைப்பு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நெல் விதைப்பு பணிகள் துவங்கியதால் பல்வேறு பகுதிகளில் இருந்து உழவுப் பணிக்காக டிராக்டர்கள் நெல் விதைப்பு செய்யும் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
இதனால், உழவு பணிகளும், விவசாய பணிகளும் தீவிர மடைந்துள்ளன.

