ADDED : செப் 09, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பகுதி கிராமங்களான செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், வரவணி, சேத்திடல், சீனாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன.
குறிப்பாக 90 முதல் 120 நாட்களில் விளைச்சல் தரக்கூடிய என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., டீலக்ஸ் பொன்னி, சோனா உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் அதிகம் விதைப்பு செய்து வருகின்றனர். நெல் விதைப்பு பணி துவங்கியதை தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் டிராக்டர்கள் மூலம் உழவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.