/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அளுந்திக்கோட்டை பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
/
அளுந்திக்கோட்டை பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
அளுந்திக்கோட்டை பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
அளுந்திக்கோட்டை பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
ADDED : செப் 27, 2025 03:54 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக நெல் விதைப்பு பணிகள் தீவிரமடைந்து முடி வடைந்துள்ளன.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக் கோட்டையில் மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு கிராமத்தினர் தங்களது கிராமத்திற்கு உட்பட்ட விளை நிலங்களில் நெல் விதைப்பு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன் தினம் முதல் கிராமத்தினர் நெல் விதைப்பு பணியை தீவிரப்படுத்தினர். நெல் விதைப்பு பணியை துவங்கிய நேரத்தில் அப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால், நெல் விதைப்பு செய்த விளை நிலங்களை டிராக்டர் மூலம் உழவு செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் சில மணி நேரத்திற்கு பிறகு விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.