ADDED : ஜன 14, 2025 05:01 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் பொங்கல் விழாவையொட்டி அழியாக் கோடுகள் நண்பர்கள் அமைப்பின் சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓவியப்போட்டி நடந்தது.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை யாசிரியர் சகாயராஜ், உடற்கல்வி இயக்குநர் ராஜா முன்னிலை வகித்தனர். குழு தலைவர் கணேசன், ஓவிய ஆசிரியர்கள் ஜெய கணேசன், பாண்டி செல்வம், சாரதி, கோபால், மோகன பிரியா, உதய திலிப் குமார், சேகர், தமிழ்கனி ஆகியோர் பங்கேற்றனர்.
