/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் வர்ணம் பூசுதல்
/
நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் வர்ணம் பூசுதல்
ADDED : ஜூலை 18, 2025 11:41 PM
திருவாடானை: வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரப் பயணங்களில் விபத்துகளைக் குறைக்க அலுமனிய தடுப்புச் வேலிகளில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் நடந்தது.
திருவாடானை-ஓரியூர் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இப் பணிகள் நடந்தது. திருவாடானை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா கூறியதாவது- அலுமினிய வேலிகளில் இந்த வண்ணங்கள் வெளிச்சத்தில் மாறுபட்டு தெரிவதால் சாலையில் வளைவுகளையும், தடுப்புகளையும் வாகன ஓட்டிகள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். மேலும் இச் சாலையில் குறிப்பிட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்ட இடங்களில் தார் நொடி போடுதல் பணிகள் நடந்தது.
தற்காலிகமாக தார் ஊற்றி சரி செய்யபட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணமாகும். இது போல் மற்ற சாலைகளிலும் இப் பணிகள் நடைபெறும் என்றார்.