/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பழனிசாமி மகன் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பழனிசாமி மகன் தரிசனம்
ADDED : ஜூலை 31, 2025 11:00 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மகன் மிதுன் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக முழுவதும் முன்னாள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அவருடன் மிதுன் உடன் வருகிறார்.
நேற்று மதியம் ராமேஸ்வரம் கோயிலுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மிதுன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் வந்தனர்.
பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் மிதுன், விஜயபாஸ்கர் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கோயில் 3ம் பிரகாரம், சிற்பங்களை கண்டு ரசித்த னர். பின் காரில் மிதுன், விஜயபாஸ்கர், அ.தி.மு.க., வினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றனர்.