ADDED : ஏப் 17, 2026 03:34 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 310 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 414 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதுகுளத்துார் கோடவுனில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு சீட்டுகள் பொருத்தும் பணி மற்றும் விவிபேட் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் கங்காதேவி ஆய்வு செய்தார். முதுகுளத்துார் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. 414 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான 992 ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் 496 விவிபேட் இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் நிறைவடைந்த பின் இருப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும். வரும் 22ம் தேதி ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்.
--
