/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி இல்லை ஏமாற்றத்தில் பனைத்தொழிலாளர்கள்
/
பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி இல்லை ஏமாற்றத்தில் பனைத்தொழிலாளர்கள்
பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி இல்லை ஏமாற்றத்தில் பனைத்தொழிலாளர்கள்
பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி இல்லை ஏமாற்றத்தில் பனைத்தொழிலாளர்கள்
ADDED : ஜன 02, 2025 04:45 AM
ராமநாதபுரம்: பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டிலாவது கருப்பட்டி இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த பனைத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளமாக பல லட்சம் பனைமரங்கள் உள்ளன.
இவை உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆண்டுதோறும் செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் செய்வோரால் வெட்டி அழிக்கப்படுகின்றன. சாயல்குடி, பனைக்குளம் சுற்றியுள்ள கிராமங்களில் பனைமரத்தில் பதநீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்கின்றனர். இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பனைமரத்தை வெட்ட அனுமதி பெற வேண்டும் என்பதும், ரேஷனில் கருப்பட்டி விற்கப்படும் என்ற அறிவிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. முழுமையாக அமலுக்கு வரவில்லை.
ராமநாதபுரம் பனைத்தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெத்துராஜ் கூறியதாவது:
அரசு அறிவித்தப்படி ரேஷனில் கருப்பட்டி விற்னை செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்பில் சர்க்கரை (சீனி) பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசை பனைத்தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி வழங்காததால் பனைத்தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறைந்து வரும் பனை மரங்கள், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரேஷனில் கருப்பட்டி விற்பனை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.