/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை உற்பத்தி கலைநயப் பொருட்கள் எம்.ஜி.ஆர்., தொப்பிக்கு மவுசு
/
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை உற்பத்தி கலைநயப் பொருட்கள் எம்.ஜி.ஆர்., தொப்பிக்கு மவுசு
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை உற்பத்தி கலைநயப் பொருட்கள் எம்.ஜி.ஆர்., தொப்பிக்கு மவுசு
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை உற்பத்தி கலைநயப் பொருட்கள் எம்.ஜி.ஆர்., தொப்பிக்கு மவுசு
ADDED : ஜன 08, 2024 05:32 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அதை சுற்றியுள்ள கிராமிங்களில் பனையின் குறுத்தோலையை உரிய முறையில் நிழலில் காயவைத்து அவற்றிலிருந்து தொப்பி, கிளுகிளுப்பை, இடியாப்பம் தட்டு, சடங்கு பெட்டி, கடையப்பட்டி என பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கலைநயமிக்க பொருட்களை தயாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை சார்ந்த உற்பத்தி பொருளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக திருப்புல்லாணி, சேதுக்கரை, தினைக்குளம், குத்துக்கல்வலசை, களிமண்குண்டு, வெள்ளையன் வலசை, மொத்திவலசை, மேதலோடை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.
பனையின் குறுத்தோலையை உரிய முறையில் நிழலில் காயவைத்து அவற்றிலிருந்து தொப்பி, கிளுகிளுப்பை, இடியாப்பம் தட்டு, சடங்கு பெட்டி, கடையப்பட்டி, துாக்குக்கூடை, பெரிய கூடை, விசிறி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் செய்கின்றனர்.
வீடுகளில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் மகளிர் ஒன்றிணைந்து குழுக்களாக பனை உற்பத்தி பொருட்களை செய்து அவற்றினை விற்பனை செய்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., தொப்பிக்கு மவுசு
திருப்புல்லாணி வியாபாரி தர்மராஜ் கூறியதாவது:
கிராமங்களில் மகளிர் சுய உதவி குழு மற்றும் பெண்கள் தயாரிக்கும் பனை உற்பத்தி பொருட்களை வாங்குகிறோம். அவற்றினை ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், மதுரை உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு விற்பனைக்காக அனுப்புகிறோம்.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக இயற்கையுடன் இணைந்த படைப்புகளுக்கு எப்பொழுதும் மவுசு நிலவுகிறது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர்., பயன்படுத்தும் வட்ட தொப்பி அதிகளவு சுற்றுலா தலங்களுக்கு விற்க வாங்குகின்றனர்.
இந்த தொப்பியை அணிவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையாக இருக்கும். தற்பொழுது பனை சார்ந்த பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சாயம் ஏற்றும் மூலப்பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.
திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் விளைநிலங்களுக்காக வெட்டி அழிக்கப்படுகின்றன. எனவே அவற்றை காப்பதற்கு பனை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.