/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
ராமநாதபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 05:11 AM

ராமநாதபுரம்: தவக்காலத்தின் முக்கிய தினமான குருத்தோலை ஞாயிறு தினமானநேற்று கையில் குருத்தோலையில் செய்யப்பட்ட சிலுவையை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல்புதன் முன்னிட்டு மார்ச் 5 சர்ச்களில் திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.
குருத்தோலை ஞாயிறு தினமான நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலையில் சிலுவை உருவத்தினை செய்து கைகளில் ஏந்தி ஓசன்னா பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச்சில் சிவகங்கை பாதிரியார் செபாஸ்டின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
பாதிரியார்கள் சிங்கராயர், கிரிதரன், தேவிப்பட்டினம் பாதிரியார் சவரிமுத்து, சகோதாரர்கள் தாமஸ், ஜான் ஆகியோர் பங்கேற்றனர். வரும் வியாழன் புனித வியாழனாக கடைபிடிக்கப்பட்டு சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் புனித வெள்ளியில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சியும், சனிக்கிழமை இரவு உயிர்ப்பித்தல் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.
பரமக்குடி: உலகநாதபுரம் அற்புத குழந்தை ஏசு சர்ச்சில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. பாதிரியார் சுவக்கின் ஞானதாஸ் தலைமையில் குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவர்கள் சென்றனர். சர்ச்சில் திருப்பலி நடந்தது.
இதேபோல் அலங்கார மாதா அன்னை சர்ச்சை நோக்கி ஐந்து முனை ரோட்டில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி சென்றனர். பாதிரியார் ஜஸ்டின் திரவியம் உட்பட பாதிரியார்கள், இறைமக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி: சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச்சில் இருந்து தெருக்களின் வழியாக கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. முத்துப்பேட்டை, கீழக்கரை, கடலாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
திருவாடானை: ஓரியூர் புனித அருளானந்தர், தொண்டி துாயசிந்தாதிரை, அஞ்சுகோட்டை புனித ஜெரால்டுமஜெல்லா, காரங்காடு துாயசெங்கோல்மாதா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. பாதிரியார்கள் ஓரியூர் ஆல்பர்ட்முத்துமாலை, தொண்டி லியாகுல அமிர்தராஜ், அஞ்சுகோட்டை அன்புஆனந்தராஜ், காரங்காடு அருள்ஜீவா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.