/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு கள் இறக்க அனுமதி கேட்டு தீர்மானம்
/
பனை தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு கள் இறக்க அனுமதி கேட்டு தீர்மானம்
பனை தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு கள் இறக்க அனுமதி கேட்டு தீர்மானம்
பனை தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு கள் இறக்க அனுமதி கேட்டு தீர்மானம்
ADDED : பிப் 16, 2024 01:47 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த பனைமரத் தொழிலாளர்கள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாட்டில், கள் இறக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கு பனை விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் முத்துராமசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
தீர்மானங்கள்: சுதந்திரத்திற்கு முன் தமிழகத்தில் 55 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 7 கோடி தான் உள்ளது. பனங்கள் 108 நாடுகளில் உணவுப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் நிறுவனம் மதுபானம் விற்கிறது. இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடைகின்றனர்.
எனவே, தென்னை மரத்திலிருந்து நீராபானம் இறக்க அரசாணை வெளியிட்டது போல, பனை மரத்தில் இருந்து கள் இறக்க அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.