/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நான்கு ஆண்டுகளில் பாம்பன் பாலம் சேதம்: மீண்டும் புதுப்பிக்க சர்வே
/
நான்கு ஆண்டுகளில் பாம்பன் பாலம் சேதம்: மீண்டும் புதுப்பிக்க சர்வே
நான்கு ஆண்டுகளில் பாம்பன் பாலம் சேதம்: மீண்டும் புதுப்பிக்க சர்வே
நான்கு ஆண்டுகளில் பாம்பன் பாலம் சேதம்: மீண்டும் புதுப்பிக்க சர்வே
ADDED : டிச 18, 2025 05:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இப்பாலத்தில் 2021ல் ரூ.18 கோடியில் சேதமடைந்த சாலை, தடுப்புச் சுவர், விரிசல் ஏற்பட்ட துாண்களை சீரமைக்கப்பட்டு புதிய வர்ணம் பூசி புதுப்பித்தனர்.
4 ஆண்டுகளில் பாலத்தில் உள்ள சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும், தடுப்பு சுவர்கள் உடைந்தும், பாலம் நடுவில் இரும்பு பிளேட் அடிக்கடி சேதமடைந்து விடுகிறது. இதனால் மக்கள் பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று டிஜிட்டல் குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் எனும் கருவி மூலம் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி மீண்டும் பாலத்தில் பராமரிப்பு பணி செய்ய உள்ளனர். தரமற்ற பணியால் 4 ஆண்டுகளில் பாலம் மோசமாகி ரூ.18 கோடி வீணாகிப் போனதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.