/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் ராமேஸ்வரம் பிளாட்பாரம் பணி மும்முரம்

ADDED : மார் 26, 2025 05:06 AM

ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் ஏப்.,ல் திறப்பு விழா நடக்க உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி நடந்து வரும் நிலையில், பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வந்து இறங்குவார்கள்.
இதனால் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷனில் 1 முதல் 4 வரை உள்ள பிளாட்பாரம் மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பயணிகள் வந்து செல்லும் பாதையை சீரமைக்கும் பணியும் நடக்கிறது.