/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் சீரமைப்பு; ரயில்வே மேலாளர் தகவல்
/
பாம்பன் பாலத்தில் சீரமைப்பு; ரயில்வே மேலாளர் தகவல்
பாம்பன் பாலத்தில் சீரமைப்பு; ரயில்வே மேலாளர் தகவல்
பாம்பன் பாலத்தில் சீரமைப்பு; ரயில்வே மேலாளர் தகவல்
ADDED : டிச 26, 2024 05:54 AM

ராமேஸ்வரம் : ''பாம்பன் புதிய ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய பணிகள் சீரமைக்கப்பட்டன,'' என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா நேற்று சிறப்பு ரயிலில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வந்தார்.
பின், டிராலியில் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு சென்றவர், புதிய துாக்கு பாலத்தை திறந்து மூடச் செய்து ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம், கூரை கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர் கூறியதாவது:
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய பணிகள் சீரமைக்கப்பட்டன. விரைவில் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. முன்னதாக பாலத்தை ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.