/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.24ல் பாம்பன் தினம் சமூக ஆர்வலர் கோரிக்கை
/
பிப்.24ல் பாம்பன் தினம் சமூக ஆர்வலர் கோரிக்கை
ADDED : அக் 04, 2024 02:36 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே நுாற்றாண்டு கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை போற்றும் வகையில் பிப்.,24ல் பாம்பன் தினம் கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் அகிலா பேட்ரிக் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் தீவை இணைப்பதாக பாம்பன் பாலம் உள்ளது. 1914 பிப்.,24ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கிய நாள் முதல் தற்போது (2022ம் ஆண்டு) வரை பல கோடி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கும், வணிக ரீதியாக வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். நுாற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலம் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது.
ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாகவும், தீவு மக்கள் வாழ்வில் கலந்த பாம்பன் பாலத்தை போற்றும் வகையில் பிப்., 24ஐ பாம்பன் தினமாக கொண்டாட வேண்டும். அந்நாளில் பாலத்தை கட்டமைத்த பொறியாளர்களை நினைவு கூர்ந்து போற்ற வேண்டும் என தெரிவித்தார்.