/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வான பாம்பன் மாற்றுத்திறனாளி மாணவர்
/
சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வான பாம்பன் மாற்றுத்திறனாளி மாணவர்
சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வான பாம்பன் மாற்றுத்திறனாளி மாணவர்
சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வான பாம்பன் மாற்றுத்திறனாளி மாணவர்
ADDED : நவ 30, 2024 02:46 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர் ஏ.நிபில் கிப்சன் ஈரானில் நடக்கும் சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட தேர்வானார்.
பாம்பனைச் சேர்ந்த மீனவ தம்பதி அனிஸ்டஸ் - மென்லின் ப்ளோரா. இவர்களது மகன் ஏ.நிபில் கிப்சன் 20. சென்னை மாநிலக் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார். தொடர்ந்து கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார்.
ஜூனில் ஐப்பானில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து இந்திய அணியில் பங்கேற்று கைப்பந்து போட்டியில் விளையாடினார்.
தொடர்ந்து ஈரானில் நடக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார்.
நிபில் கிப்சனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.
நிபில் கிப்சன் தாய் மென்லின் ப்ளோரா கூறியதாவது: காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கான 'இண்டியா ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் டெப்' கைப்பந்து அணியில் 12 பேரில் தமிழகத்தில் இருந்து மகன் நிபில் கிப்சன் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐப்பானில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து ஈரானில் உலக அளவிலான போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். தற்போது சூழ்நிலை சரி இல்லாததால் போட்டி நடைபெறும் நாளை தெரிவிக்கவில்லை.
நிபில் ஈரான் சென்று வர அரசு நிதிஉதவி செய்ய வேண்டும் என்றார்.

