/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
/
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
ADDED : பிப் 01, 2024 02:22 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு மீனவரின் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
ஜன.30ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் பாம்பனை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது விசைப்படகில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
இம்மீன்களின் இனம் குறைவாக உள்ளதால் வலையில் சிக்குவது அரிதானது. தற்போது சிக்கிய இம் மீன் 12 கிலோ எடை, துடுப்புடன் 3 அடி உயரம், 2 அடி நீளம் கொண்டதாக உள்ளது. மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மை உடையது.
ருசி இல்லாத இம்மீனை மீனவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இதனால் பாம்பன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.60க்கு வாங்கி கருவாடாக விற்க முடிவு செய்தார்.