/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டும் குழியுமாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்
/
குண்டும் குழியுமாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்
ADDED : நவ 29, 2024 02:20 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், 1988ல் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணியர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்ட நிலையில், சேதமடைந்த துாண்கள், தடுப்புச் சுவர்கள், மின் விளக்குகள் 2021ல் புதுப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், 2 கி.மீ., நீளமுள்ள பாலத்தின் சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சிமென்ட் பூச்சு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீட்டியபடி வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன.
சேதமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, சத்தம் எழுவதால் பயணியர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
சேதமடைந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

