/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய துாக்குப்பால பணி ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு
/
பாம்பன் புதிய துாக்குப்பால பணி ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு
பாம்பன் புதிய துாக்குப்பால பணி ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு
பாம்பன் புதிய துாக்குப்பால பணி ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு
ADDED : பிப் 22, 2024 02:32 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலம் கட்டுமான பணிகளை ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா ஆய்வு செய்தார்.
மொத்தம், 535 கோடி ரூபாயில் அமையும் இப்பாலம் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது துாக்கு பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை பிப்., 25க்கு பின் நகர்த்தி ஏப்ரலில் புதிய பாலம் நடுவில் பொருத்த உள்ளனர்.
இப்பணிகளை நேற்று இந்திய ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா பாம்பன் வந்து புதிய பாலம் மற்றும் துாக்கு பாலத்தை ஆய்வு செய்தார். பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரத்தில், 92 கோடியில் அமைக்கப்படும் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், முதன்மை நிர்வாக அலுவலர் அமித்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.