/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜன.10க்குள் பாம்பன் ரயில் பாலம் திறக்க வாய்ப்பு: ரயில்வே பொறியாளர்கள் தகவல்
/
ஜன.10க்குள் பாம்பன் ரயில் பாலம் திறக்க வாய்ப்பு: ரயில்வே பொறியாளர்கள் தகவல்
ஜன.10க்குள் பாம்பன் ரயில் பாலம் திறக்க வாய்ப்பு: ரயில்வே பொறியாளர்கள் தகவல்
ஜன.10க்குள் பாம்பன் ரயில் பாலம் திறக்க வாய்ப்பு: ரயில்வே பொறியாளர்கள் தகவல்
ADDED : டிச 28, 2024 01:35 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் ஜன.,10க்குள் திறக்க வாய்ப்பு உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமான பணி முடிந்து, நவ., 13,14ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு செய்தார். இதில் பாலத்தில் உள்ள இரும்பு கர்டரில் துருப்பிடித்தல், துாக்குப் பாலத்தில் 'வெல்டிங்' பணி உள்ளிட்ட சில பணியில் குறைகளை சுட்டிக்காட்டினார்.
இதனால் பாம்பன் பாலம் திறப்பு விழா தள்ளிப்போனது. இதனையடுத்து பாலத்தில் உள்ள குறைகளை சரி செய்து, நேற்று புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை நடந்தது. இதில் சென்னையில் இருந்து பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களை ரயில்வே பொறியாளர்கள் அழைத்து வந்தனர்.
இதன்பின் தென்னக ரயில்வே கட்டுமான பிரிவு மூத்த துணை பொது மேலாளர் சீனிவாசன் கூறியதாவது: ரூ.540 கோடியில் அமைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தில், சி.ஆர்.எஸ்., சுட்டிக்காட்டிய பணிகள் அனைத்தும் சரி செய்து, 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தனர். தற்போது பாலத்தில் 100 சதவீதம் பணி முடிந்தது. ஜன.,10க்குள் திறப்பு விழா நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யும்.
புதிய பாலத்தில் 75 கி.மீ., வேகத்திலும், துாக்கு பாலத்தில் 50 கி.மீ., வேகத்திலும் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 58 கி.மீ., மேல் காற்று வீசினால் தானியங்கியாக கிரீன் சிக்னல் காட்டாது. இதனால் பாலத்தில் ரயில் செல்லாது. பாலத்தில் துருப்பிடிக்காத வகையில் விலை உயர்ந்த பெயிண்ட் பூசப்பட்டுள்ளதால், இதற்கு 35 ஆண்டு உத்தரவாதம் உள்ளது.
பழைய பாலம் போல், இதுவும் நுாறு ஆண்டுகளை கடந்து உறுதியுடன் இருக்கும். இந்த பாலத்தில் துாண்கள் 38 மீ., ஆழத்திலும், பாலம் முழுவதும் 5500 மெட்ரிக் டன் இரும்பிலும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். ரயில்வே கட்டுமானப் பிரிவு மூத்தப்பொறியாளர் அன்பழகன் உடனிருந்தார்.