/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர்ந்து 12 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பம்மனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி

ADDED : மே 18, 2025 10:11 PM
கமுதி : கமுதி அருகே பம்மனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கமுதி அருகே பம்மனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி 1961ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பம்மனேந்தல், கரிசல் குளம், சிறுகுளம், மேல மாவிலங்கை, கீழமாவிலங்கை கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பம்மனேந்தல் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பாராட்டினர்.