/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் துாக்கு பாலம் இம்மாத இறுதியில் திறப்பு: கூடுதல் பொது மேலாளர் தகவல்

ADDED : அக் 15, 2024 07:14 AM

ராமேஸ்வரம் : ''ராமேஸ்வரம் பாம்பன் ரயில் துாக்கு பாலம் சோதனைகள் முடிந்த நிலையில், இம்மாத இறுதியில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
நேற்று ராமேஸ்வரம் அருகே மண்டபம் வந்த கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை ஆய்வு செய்து, லிப்ட் முறையில் திறந்து மூடுவதை பார்வையிட்டார்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா,ரயில்வே பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், கவுசல் கிஷோர் கூறியதாவது: பாம்பன் ரயில் பாலத்தில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்ட சோதனை செய்யப்பட்டுள்ளது. இனி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வார். காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடக்கும்.
இம்மாத இறுதிக்குள் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும். திறப்பு விழாவை மண்டபம் முகாமில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணி தொடர்ந்து நடக்கிறது. பழைய பாம்பன் ரயில் பாலத்தை ராமேஸ்வரம் அல்லது மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க ஆலோசிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.