/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளம் ஊராட்சி வரி வசூலில் முறைகேடு ஆண்டு தணிக்கையில் தகவல்
/
பனைக்குளம் ஊராட்சி வரி வசூலில் முறைகேடு ஆண்டு தணிக்கையில் தகவல்
பனைக்குளம் ஊராட்சி வரி வசூலில் முறைகேடு ஆண்டு தணிக்கையில் தகவல்
பனைக்குளம் ஊராட்சி வரி வசூலில் முறைகேடு ஆண்டு தணிக்கையில் தகவல்
ADDED : பிப் 22, 2024 03:01 AM
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் வரி வசூல் ரசீதுவழங்கும் போது நாள் குறிப்பிடவில்லை. இருபக்க கார்பன் நடைமுறையை பின்பற்றாமல் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது 2022-2023 வரவு-செலவு கணக்கு தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் துணை பி.டி.ஓ., நந்திதா தலைமையில் தணிக்கை பிரிவினர் 2022-23 வரவு செலவு கணக்கு தணிக்கை செய்துள்ளனர்.
இதில், வரி வசூல் ரசீது புத்தகங்கள் பயன்படுத்திய போது பி.டி.ஓ., ஒப்புதல் பெறவில்லை.
வரி வசூல் ரசீதுகளில் தேதி குறிப்பிடப்படவில்லை. இருபக்க கார்பன் நடைமுறையை பின்பற்றவில்லை. ஊராட்சி கணக்கு எண் 1ல் நிர்வாக செலவு தவிர பிற செலவினங்களில் ஒப்பந்தம் மூலம் செய்யப்படும் வேலைகளுக்குரிய தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர், நிறுவனங்களின் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் உரிமையாளர் பெயரில் வழங்கியுள்ளனர்.
மேலும் பிற நிதித் தலைப்புகளுக்கான காசோலைகளில் அரசால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ரப்பர் ஸ்டாம்ப் பதிவுகள் இருக்க வேண்டும். பனைக்குளம் ஊராட்சியில் இந்த நடைமுறை பின்பற்றபடவில்லை.குறிப்பாக வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு ஊராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறவில்லை.
கூடுதல் செலவினம் குறித்து அறிய முடியவில்லை. இக்குறைபாடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நுாலக வரி அரசு தலைப்பில் செலுத்தப்படவில்லை. வீட்டு வரி, வரி சீராய்வு செய்யப்படாமல் உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு செலவினங்கள் கூடுதலாக செலவு செய்துள்ளனர். பணிப்பதிவேடு பராமரித்தலில் விதிமீறல் நடந்துள்ளது. ஊராட்சி செயலருக்கு தொழில் வரி வசூலிக்கவில்லை. இவ்வாறு பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தணிக்கையில் தெரிய வந்துள்ளதாக கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பனைக்குளம் ஊராட்சி தலைவர் பி. பவுசியா பானு கூறியதாவது: தணிக்கையில் கூறிய குறைபாடுகளுக்கு விளக்கம் தருமாறு கலெக்டர் கூறினார். அதன் பேரில் 15 நாட்களுக்கு முன்பு விரிவான அறிக்கை கலெக்டருக்கு அனுப்பியுள்ளேன். ஒரு சிலர் துாண்டுதலின் பேரில் பொய் புகார் செய்கின்றனர். பெண் என்பதால் டார்ச்சர் செய்கின்றனர். என்மீது தவறு இல்லை என நிரூபிக்க தயராக உள்ளேன் என்றார்.