/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் நாய்களை பிடித்த ஊராட்சி நிர்வாகம்
/
ரெகுநாதபுரத்தில் நாய்களை பிடித்த ஊராட்சி நிர்வாகம்
ரெகுநாதபுரத்தில் நாய்களை பிடித்த ஊராட்சி நிர்வாகம்
ரெகுநாதபுரத்தில் நாய்களை பிடித்த ஊராட்சி நிர்வாகம்
ADDED : டிச 23, 2024 04:37 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சியில் இரண்டு நாட்களில் மூன்று பேரை வெறிநாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நாய்களை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரெகுநாதபுரம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ரத்தின வள்ளி 60, விவசாயிகள் சுப்பையா 65, ராஜேந்திரன் 62, ஆகிரோரை வெறி நாய்கள் விரட்டிக் கடித்ததால் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கால்நடைகளையும் தொடர்ந்து கடித்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரெகுநாதபுரம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வெறி நாய்களைப் பிடிக்கும் பணி துவங்கியது.
பாதுகாப்பான முறையில் 50க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் பிடிக்கப்பட்டன.
ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.