/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடுகுச்சந்தை கிழக்கு கடற்கரை சாலையோரம் கழிவு நீர் குட்டை; கண்டுகொள்ளாத ஊராட்சி

ADDED : ஜூலை 31, 2025 11:02 PM

சாயல்குடி; சாயல்குடி அருகே கடுகுச்சந்தை கிராமம் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ளது. கடுகுச்சந்தை கிராமத்தில் உள்ளோர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் வழியாக தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதான பைப் லைன் செல்லும் வழியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக குழாய் அடிப்பகுதி உள்ளது. பல மாதங்களாக பராமரிப்பின்றி இருந்ததால் அவற்றில் இருந்து வழியும் நீர் கழிவுநீர் தேங்கும் குட்டையாக உருவெடுத்துள்ளது.
கடலாடி யூனியன் நிர் வாகத்தின் சார்பில் பெரும் பாலான இடங்களில் உறிஞ்சி குழாய் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பயன்படாத இடத்தில் அதி களவு ரூ.15 ஆயிரம் வீதம் பல இடங்களில் உறிஞ்சு குழாய் உள்ளது. அவற்றை இக்குழாயின் அருகே இத்திட்டத்தை செயல் படுத்தாமல் உள்ளனர்
கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியாக செல்லும் நிலையில் சாலையோர குட்டையால் விபத்து அபாயம் உள்ளது.