/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் கழிவுகள் கொட்டினால் குற்ற வழக்கு ஊராட்சி தலைவர் எச்சரிக்கை

ADDED : அக் 21, 2024 04:55 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது போலீசார் குற்ற வழக்கு பாயும் என ஊராட்சி தலைவர் அகிலா பேட்ரிக் தெரிவித்தார்.
பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் பராமரிப்பின்றி சுகாதாரக் கேடாக உள்ளது.
இந்நிலையில் பாம்பனில் ஆடு, மாடு, கோழி இறைச்சி விற்கும் வியாபாரிகள், இதன் கழிவுகளை பாம்பன் பாலம் கிழக்கு நுழைவுப் பகுதியில் கொட்டி விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்கின்றனர்.
இதனை அகற்றி இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்.19ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலாபேட்ரிக் கூறியதாவது :
பாம்பன் பாலம் நுழைவில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை விடப்பட்டது. ஆனால் மீண்டும் இறைச்சி கழிவுகளை கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து போலீசார் மூலம் குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.