/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
/
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : மே 04, 2025 06:39 AM
கடலாடி : கடலாடியில் உள்ள தேவர் மஹாலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன் முன்னிலை வகித்தார்.
கடலாடி ஒன்றிய தலைவர் ராம மாரி வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ். ராமசுப்பு, மாநில இணைச்செயலாளர் கணேச பாண்டியன், விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணன், சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சிவசாமி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் பணி புரியும் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க புதிய மாவட்ட தலைவராக முருகன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளராக சிவசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கலந்தாய்வு பணி மாறுதல் சம்பந்தமாக கருத்து கேட்டல், சங்க கட்டட நிதி பெறுவது மற்றும் பங்குதாரர் இணைவது பற்றியும் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட இதர பொருள்கள் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய பொருளாளர் பாஞ்சாலி நன்றி கூறினார்.